ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் இயக்கம், நடிப்பில் வெளிவந்த 'ஒரே ஷாட்' படம் 'இரவின் நிழல்'. ஏஆர் ரகுமான் இசையமைத்த இந்தப் படம் கடந்த ஜுலை மாதம் 15ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. பொதுவாக ஒரு படம் தியேட்டர்களில் வெளியாகி நான்கு வாரங்கள் கழித்து ஓடிடி தளங்களில் வெளிவந்துவிடும். ஆனால், இந்தப் படம் வெளிவந்து நான்கு மாதங்களாகியும் ஓடிடியில் வெளிவரவில்லை.
இந்நிலையில் படத்தைத் திடீரென ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளார்கள். அது குறித்து படத்தின் இயக்குனர் பார்த்திபனுக்கும் தெரியவில்லை போலிருக்கிறது. இத்தனைக்கும் படத்தில் பார்த்திபனும் ஒரு தயாரிப்பாளர். படம் ஓடிடியில் வெளியானது குறித்து பார்த்திபன், “மகிழ்ச்சியை கூட… அறிவித்து அனுபவிக்க முடியவில்லை. அமேசானில் 'இரவின் நிழல்' எனக்கேத் தெரியாமல்! பிளீஸ் நேரம் ஒதுக்கி முழுமையாய் பாருங்கள்(single shot) ஆதரவை தர வேண்டுகிறேன்!
நன்றியுடன்,” என்று பதிவிட்டுள்ளார்.