மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
பிரதீப் ரங்கநாதன் இயக்கம், நடிப்பில் வெளிவந்துள்ள 'லவ் டுடே' படம் கடந்த ஐந்து நாட்களில் 20 கோடி ரூபாய் வரை வசூலித்து வெற்றிப் படமாக அமைந்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தைத் தெலுங்கில் டப்பிங் செய்து அடுத்த வாரம் வெளியிட உள்ளார்கள்.
விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தைத் தயாரித்து வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இப்படத்தைத் தெலுங்கில் வெளியிடுகிறது. படத்தில் நடித்துள்ள சத்யராஜ், ராதிகா ஆகியோர் தெலுங்கு ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள். மேலும், பிரதீப் புதுமுகம் என்பதால் இந்தப் படத்தை ரீமேக் செய்வதை விட டப்பிங் செய்து வெளியிடலாம் என முடிவு செய்துவிட்டார்களாம்.
தமிழில் இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பை உருவாக்கியது அதன் டிரைலர் தான். எனவே, தெலுங்கிலும் அது போல டிரைலரை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்த முயற்சிப்பதாகத் தகவல். தமிழில் சமீப காலங்களில் வெளிவந்த படங்களில் 'டேபிள் பிராபிட்' பார்த்த படங்களில் இந்த 'லவ் டுடே' படமும் இருக்கிறதாம். சுமார் 6 கோடி செலவில் தயாரானதாக சொல்லப்படும் இந்தப் படத்தின் தியேட்டர் வசூல் 20 கோடி, மேலும், ஓடிடி, சாட்டிலைட் உரிமை என நிறையவே லாபத்தைக் கொடுத்துள்ளது. தெலுங்கிலும் படம் வெற்றி பெற்றால் அதுவும் கூடுதல் லாபம்தான்.