ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் | அங்கிளான என்னை அண்ணனாக மாற்றிவிட்டார் பஹத் பாசில் ; இயக்குனர் சத்யன் அந்திக்காடு பெருமிதம் |
மாடல் உலகில் முன்னணியில் இருக்கும் இவானா வருண் நடிக்கும் படம் 'ராஞ்சா'. இதில் பிரஜின் நாயகனாக நடிக்கிறார். இவர்கள் தவிர அதிரன், சாம்ப சிவம், பத்மன், அனுபமா குமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி சந்தோஷ் ராவணன் இயக்குகிறார். ஹரி இசை அமைக்கிறார், கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தை சி.வி.குமார், கே.சாம்ப சிவம் இணைந்து தயாரித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
படம் குறித்து இயக்குனர் சந்தோஷ் ராவணன் கூறும்போது “காதல், திரில்லர் கதையம்சத்தில் இப்படம் தயாராகிறது. போலீஸ் அதிகாரியாக பிரஜின் வருகிறார். அடுத்தடுத்து மூன்று பேர் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். பிரஜினும் சில பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி வருகிறது. மர்ம மரணங்களின் பின்னணியில் இருக்கும் விஷயங்கள் என்ன, பிரஜினால் அதை கண்டுபிடிக்க முடிந்ததா என்பது கதை'' என்றார்.