ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடிக்க தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பவர் பிரஜின். தீக்குளிக்கும் பச்சை மரம், பழைய வண்ணாரப்பேட்டை, மணல் நகரம், படிக்காத பக்கங்கள், சேவகர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் அவருக்கு நல்ல வெற்றி அமையவில்லை.
இந்த நிலையில் தரைப்படை என்ற படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக மாறி இருக்கிறார். ராம் பிரபா இயக்கியுள்ளார். ஜீவா, விஜய் விஷ்வா ஆகியோரும் ஹீரோக்களாக நடித்துள்ளனர். மூன்று அறிமுக நடிகைகள் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் ராம் பிரபா கூறும்போது "வியாபாரம் என்ற பெயரில் மக்கள் பணத்தை அபகரிக்கும் மோசடி கும்பலிடம் இருந்து கேங்ஸ்டர் கும்பல் அந்த பணத்தை கைப்பற்ற, அவர்களிடம் இருந்து மற்றொருவர் என்று அந்த பணம் கைமாறிக் கொண்டே போகிறது. பல்வேறு வகையில், பல்வேறு மனிதர்களிடம் பயணிக்கும் அந்த பணம் இறுதியில் என்னவானது, என்பதை விறுவிறுப்பான ஆக்ஷன் திரில்லர் ஜானரில் சொல்வதே படத்தின் கதை. தமிழ், தெலுங்கு மொழிகளில் வருகிற 28ம் தேதி வெளியிடுகிறோம்" என்றார்.