காத்திருந்த இயக்குனர்களுக்கு அதிர்ச்சியளித்த ‛அமரன்' | ‛ஏஸ்' எனக்கு ஸ்பெஷலான படம்: ருக்மணி வசந்த் | ‛‛100 வருஷம் ஆனாலும் பாசம் மாறாது'' : மதுரை மக்கள் பற்றி விஷால் கருத்து | ‛‛எனக்கு பிடித்த மதுரையும், மீனாட்சி அம்மனும்...'': ஐஸ்வர்யா லட்சுமி நெகிழ்ச்சி | அம்ரிதா பிரிதமின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க விரும்பும் நிம்ரத் கவுர் | இனி ஹீரோ தான்: நடிகர் சூரி 'பளீச்' | பிளாஷ்பேக்: சர்வதேச விருதினை வென்றெடுத்த முதல் தமிழ் திரைப்படம் “வீரபாண்டிய கட்டபொம்மன்” | ஜுன் மாதத்தில் 4 பான் இந்தியா திரைப்படங்கள் ரிலீஸ் | 'விக்ரம்' டிரைலர் சாதனையை முறியடித்த 'தக் லைப்' டிரைலர் | நயன்தாரா நடிப்பது பற்றிய வீடியோ, 'இவ்ளோ சுமாரா' எடுத்திருக்க வேண்டுமா? |
கருப்பு வெள்ளை சினிமா காலத்தில் வித்தியாசமான படங்களை எடுத்தவர் ஸ்ரீதர். வண்ணப் படங்கள் வந்த பிறகு காதல் படங்களை இயக்கினார். அவருக்கு எம்ஜிஆரை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அந்தப் படத்தின் பெயர் 'அன்று சிந்திய ரத்தம்'. எம்ஜிஆருக்கு ஏற்ற மாதிரியான ஆக்ஷன் பழிவாங்கும் கதை. எம்ஜிஆர் நடிக்க ஒப்புக்கொண்டார் அட்வான்ஸ் தொகையாக ஆரம்பத்தில் எம்.ஜி.ஆருக்கு 25 ஆயிரம் கொடுத்தார் ஸ்ரீதர்.
எம்ஜிஆர் சில காட்சிகளில் நடித்திருந்த நிலையில் வேறு பல காரணங்களால் படம் நின்று விட்டது. இந்தப் படம் தொடர்பாக எம்ஜிஆருக்கும், ஸ்ரீதருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாக சொல்வார்கள்.
ஒரு கட்டத்தில் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய ஸ்ரீதர், எம்ஜிஆர் வைத்து மீண்டும் படம் இயக்க விரும்பினார். ஆனால் எம்ஜிஆரை அணுக பயந்தார். இயக்குநர் பி.வாசுவின் தந்தையும், எம்.ஜி.ஆரின் ஆஸ்தான ஒப்பனையாளருமான பீதாம்பரம் இதற்கு தூதராக செயல்பட்டார். எம்ஜிஆர் எந்த தயக்கமும் இன்றி ஸ்ரீதர் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
அதோடு ஸ்ரீதர் பெரிய இயக்குனர், அவர் என்னை தேடி வர வேண்டாம். நானும் அவரை தேடி செல்வது முறையாக இருக்காது பொதுவான ஒரு இடமாக நம்பியார் வீட்டில் சந்தித்து படம் தொடர்பாக பேசுவோம் என்று எம்ஜிஆர் சொன்னார். ஆனால் இதை கேள்விப்பட்ட ஸ்ரீதர் நேரடியாக ராமாவரம் தோட்டத்திற்கு சென்று எம்ஜிஆரை சந்தித்தார். எம்ஜிஆர் மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல் அவருக்கு விருந்து கொடுத்து உபசரித்தார். பின்னர் படம் குறித்து பேசினார்கள்.
படம் சம்பந்தமாக பேசி முடித்ததும் எம்ஜிஆருக்கு முன் பணம் கொடுக்க ஸ்ரீதர் முன் வந்தார். அன்று சிந்திய ரத்தம் படத்திற்கு கொடுத்த தொகையை நான் அட்வான்ஸ் ஆக ஏற்றுக் கொள்கிறேன். படத்தை சீக்கிரம் ஆரம்பிங்க மூன்று மாதத்தில் முடித்து கொடுக்கிறேன் என்றார். அதோடு இந்த உறுதி மொழியை கடிதமாக எழுதி கையெழுத்து போட்டு ஸ்ரீதரிடம் கொடுத்து ''இது நீங்கள் பைனான்ஸ் பெறுவதற்கு உதவும்'' என்றார். அப்படி உருவான படம் தான் 'உரிமைக்குரல்'. எம்ஜிஆர் உடன் லதா, அஞ்சலி தேவி, எம்என் நம்பியார் உள்ளிட்டோர் நடித்தனர். படமும் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.
அதேசமயம் 'அன்று சிந்திய ரத்தம்' என்ற பெயரில் பின்னாளில் ஜெய்சங்கர் நடிக்க ஒரு படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.