ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
தமிழ், தெலுங்கில் தனுஷ் நடித்து வரும் படம் 'வாத்தி'. தெலுங்கு தயாரிப்பாளர்கள் தயாரிக்க, தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லூரி இயக்கும் இந்தப் படம் டிசம்பர் 2ம் தேதி வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
படக் குழுவுக்கும் தனுஷுக்கும் இடையில் பட வெளியீட்டுத் தேதி பற்றிய அறிவிப்பில் ஏதோ ஒரு முரண்பாடு ஏற்பட்டதாக டோலிவுட்டில் ஒரு செய்தி பரவியிருந்தது. அந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி பற்றிய அறிவிப்பு செப்டம்பர் 19ம் தேதி வெளியான போதே, அந்த போஸ்டரை தனுஷ் கண்டு கொள்ளவில்லை. அதை ரிடுவீட்டும் செய்யவில்லை.
இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு தீபாவளி தினத்தன்று படத்தின் புதிய போஸ்டரை தீபாவளி வாழ்த்துடன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. அந்த போஸ்டரில் வெளியீட்டுத் தேதியைக் குறிப்பிடாமல் இருந்தனர். ஆனால், மதியத்திற்கு மேல் அதன் தயாரிப்பாளர் வெளியீட்டுத் தேதியுடன் கூடிய அதே போஸ்டரை மீண்டும் வெளியிட்டார்.
தனுஷ் நடித்து அடுத்து வெளிவர உள்ள படம் 'வாத்தி' தான். ஆனால், இந்த படம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு தகவலையும் தனுஷ் கண்டு கொள்ளாதது அவரது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து படத்தின் தயாரிப்பாளர்களோ, இயக்குனரோ எதுவும் சொல்லாமல் மவுனம் காத்து வருகின்றனர்.