டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி |
ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்து உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூலித்த படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்தைக் கடந்த வாரம் ஜப்பானில் வெளியிட்டார்கள். அதற்காக இயக்குனர் ராஜமவுலி, ஜுனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோர் ஜப்பான் நாட்டிற்குச் சென்று பத்திரிகையாளர் சந்திப்பு, சிறப்புக் காட்சிகளுக்கு ரசிகர்களுடன் சந்திப்பு ஆகியவற்றை நடத்தினார்கள்.
'பாகுபலி 2' அளவிற்காவது படம் வசூலிக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், கடந்த நான்கு நாட்களில் சுமார் 4 கோடி வரை மட்டுமே வசூலித்து 2 கோடி வரை பங்குத் தொகையைக் கொடுத்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் புரமோஷனுக்காக மட்டுமே 5 கோடி வரை செலவு செய்துள்ளார்களாம். அந்த செலவையாவது படம் வசூலித்துத் தருமா என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
ஆஸ்கர் விருது போட்டியிலும் நேரடியாகக் கலந்து கொள்ளும் 'ஆர்ஆர்ஆர்' படத்தை உலக அளவில் பிரபலப்படுத்தி பான் வேர்ல்டு இயக்குனர் ஆகும் முயற்சியில் ராஜமவுலி இருக்கிறார் என்கிறார்கள். ஆனால், ஜப்பான் வசூல் ஏமாற்றத்தைத்தான் தரும் என்று தகவல்.