பாவனா தயாரிக்கும் படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் அனிமல் பட இசையமைப்பாளர் | போதை வழக்கில் முன்ஜாமின் கோரிய மனுவை வாபஸ் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | 'ஆலப்புழா ஜிம்கானா' படக்குழுவினரை பாராட்டிய சிவகார்த்திகேயன் | மே 9ல் ரிலீஸ் ஆகும் திலீப்பின் 150வது படம் | ஓடிடி.,க்கு அதிக விலைக்கு போன டாப் தமிழ் படங்கள் | 20 ஆண்டுகளாக தோழிகளாக வலம்வரும் திரிஷா - சார்மி! | 'குபேரா' படத்தின் புதிய அப்டேட்! | அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி |
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் பலர் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்று ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இப்படத்தை உலகம் முழுவதும் இன்னும் வெளியாகாத நாடுகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த விதத்தில் ஜப்பான் நாட்டில் இப்படம் நாளை அக்டோபர் 21ம் தேதி வெளியாகிறது. அங்கு படத்தைப் பிரபலப்படுத்த இயக்குனர் ராஜமவுலி, ஜுனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோர் டோக்கியோ சென்றுள்ளனர். அங்கு ஜப்பானிய பத்திரிகையாளர்களைச் சந்தித்து படத்தைப் பற்றிய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த 'பாகுபலி 2' படம் ஜப்பான் நாட்டில் குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்றது. அது போலவே இந்தப் படமும் வசூலைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஜப்பான் நாட்டில் இதுவரை வெளியான இந்தியத் திரைப்படங்களில் 1998ம் ஆண்டு அங்கு வெளியிடப்பட்ட தமிழ்ப் படமான ரஜினிகாந்த் நடித்த 'முத்து' திரைப்படம்தான் அதிக வசூலைக் குவித்து முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்து இரண்டாவது இடத்தில் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த 'பாகுபலி 2' படம் உள்ளது. 'ஆர்ஆர்ஆர்' படம் அந்த இரண்டு படங்களின் வசூலை முறியடிக்குமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.