நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் |
இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் திருமணம் செய்து கொண்ட நான்கே மாதங்களில் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றெடுத்த நிகழ்வு மிகப்பெரிய விவாதங்களை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு தம்பதி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும் உட்பட பல்வேறு சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். ஆனால் இவர்கள் அதை மீறியதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக மருத்துவக்குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதுஒருபுறம் இருக்க இந்த தம்பதி 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்ததாகவும், டிசம்பரிலேயே குழந்தை பெற விண்ணப்பித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த விசாரணைகள் எல்லாம் ஒருபுறம் சென்று கொண்டிருக்க குழந்தைகள் பிறந்த மகிழ்ச்சியில் உள்ளனர் இந்த தம்பதியர். அதிலும் விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தைகள் செய்யும் குறும்புத்தனமான விஷயங்களை வீடியோவாக போஸ்ட் செய்து வருகிறார்.
இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டிருக்கிறார் விக்னேஷ் சிவன். அதில் தனது மகன் தன் மீது சிறுநீர் கழித்துள்ள அடையாளத்தை பகிர்ந்து உள்ள அவர், தனது கனவு நனவாகி விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.