100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2 : படத்தில் நடிப்பவர்கள் விபரம் | பாலிவுட்டை விட்டு விலக முடிவெடுத்த அனுராக் காஷ்யப் | என் பணியை சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன் - கஜராஜ் ராவ் | விஷ்ணு விஷாலுக்கு வில்லன் ஆன செல்வராகவன்! | அடுத்த மாதம் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு துவங்குகிறது | ராம்சரண் படத்திற்கு தயாரான சிவராஜ் குமார்! | நாகார்ஜூனா உடன் நடனமாடும் பூஜா ஹெக்டே! | பிளாஷ்பேக் : மோகன் கையில் மைக்கை கொடுத்த இயக்குனர் | பிளாஷ்பேக் : மறக்கடிக்கப்பட்ட மகா கலைஞன் கொத்தமங்கலம் சீனு | கோவில்களில் சினிமா பாட்டு பாட நீதிமன்றம் தடை |
கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ்சிவனும் திருமணம் செய்து கொண்டார்கள். இந்த நிலையில் 4 மாதங்கள் ஆன நிலையில் கடந்த 9ம் தேதி அவர்களுக்கு வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. இது குறித்த தகவலை விக்னேஷ் சிவன் வெளியிட்டதிலிருந்து பலவிதமான விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தனது சோசியல் மீடியா பக்கத்தில் விக்னேஷ் சிவன் இரண்டு பதிவுகள் போட்டு உள்ளார்.
அதில், ‛உங்களிடம் அக்கறை செலுத்துபவர்கள் மீது கவனம் செலுத்துங்கள். அவர்கள்தான் எப்போதும் உங்களுடனே இருப்பார்கள். யார் உங்களுடன் சிறப்பாக இருக்கிறார்களோ அவர்கள்தான் உங்களுக்கானவர்கள்' என்று தெரிவித்திருக்கிறார். இன்னொரு பதிவில், ‛எல்லாம் சரியான நேரத்தில் உங்களை வந்து சேரும். அதுவரைக்கும் பொறுமையுடனும் நன்றியுடனும் இருங்கள்' என்று பதிவிட்டு இருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.