100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2 : படத்தில் நடிப்பவர்கள் விபரம் | பாலிவுட்டை விட்டு விலக முடிவெடுத்த அனுராக் காஷ்யப் | என் பணியை சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன் - கஜராஜ் ராவ் | விஷ்ணு விஷாலுக்கு வில்லன் ஆன செல்வராகவன்! | அடுத்த மாதம் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு துவங்குகிறது | ராம்சரண் படத்திற்கு தயாரான சிவராஜ் குமார்! | நாகார்ஜூனா உடன் நடனமாடும் பூஜா ஹெக்டே! | பிளாஷ்பேக் : மோகன் கையில் மைக்கை கொடுத்த இயக்குனர் | பிளாஷ்பேக் : மறக்கடிக்கப்பட்ட மகா கலைஞன் கொத்தமங்கலம் சீனு | கோவில்களில் சினிமா பாட்டு பாட நீதிமன்றம் தடை |
பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகரான அமிதாப்பச்சன் நேற்று முன்தினம் தனது 80வது பிறந்த நாளை கொண்டாடினார். அதையடுத்து இந்திய சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்கள். இந்த நிலையில் ரஜினிகாந்தும், அமிதாப்பச்சனுக்கு 80வது பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து ஒரு தகவல் வெளியிட்டு இருந்தார். அதில், அமிதாப்பச்சனை லெஜன்ட் என்று குறிப்பிட்டு இருந்தார் ரஜினி. அதோடு எப்போதும் என்னை ஊக்கப்படுத்தியவர், இந்திய திரை உலகின் உண்மையான சூப்பர் ஹீரோ 80 வயதில் நுழைகிறார் என்று தன்னுடைய வாழ்த்துக்களை பதிவிட்டு இருந்தார் ரஜினிகாந்த்.
அதையடுத்து அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு பதிவு போட்டுள்ளார் அமிதாப்பச்சன். அதில், ‛ரஜினி சார், நீங்கள் எனக்கு டூமச் கிரெடிட் கொடுத்துள்ளீர்கள். உங்களது உயரத்தோடும் பெருமையோடும் என்னை ஒருபோதும் ஒப்பிட முடியாது. நீங்கள் ஒரு சக நடிகர் மட்டுமின்றி அன்பான நண்பர். உங்களுக்கு எனது அன்பும் நன்றியும்' என பதிவிட்டு இருக்கிறார் அமிதாப்பச்சன்.