மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் மீண்டும் அஜித் நடித்துள்ள படம் துணிவு. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருக்கிறார். வங்கி கொள்ளை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகும் இந்த படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பு பேங்காக்கில் நடைபெற்றது. நேற்றுடன் துணிவு படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது.
விரைவில் துணிவு படத்தின் ரிலீஸ் செய்தியை போனிகபூர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு படத்தோடு அஜித்தின் துணிவு படமும் திரைக்கு வர இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி கொண்டிருப்பதால், தற்போது அஜித்தின் ரசிகர்கள் பொங்கலுக்கு துணிவு படம் திரைக்கு வருவது போலவும் அப்படம் வெளியாகும் தியேட்டர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு ஒரு போஸ்டரை சோசியல் மீடியாவில் வெளியீட்டு வைரலாக்கி வருகிறார்கள்.