டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

விஜய்யுடன் வாரிசு, அல்லு அர்ஜுனுடன் புஷ்பா- 2 மற்றும் ஹிந்தியில் மூன்று படங்களில் நடிக்கிறார் ராஷ்மிகா மந்தனா . விரைவில் அவர் நடித்துள்ள குட் பை ஹிந்தி படம் திரைக்கு வருவதால் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் தற்போது கலந்து கொண்டு வருகிறார் ராஷ்மிகா. அப்போது கன்னட ஹீரோ ரஷித் ஷெட்டியுடன் நிச்சயதார்த்தம் வரை சென்ற அவரது திருமணம் தடைப்பட்டது பற்றி அவரிடம் மீடியாக்கள் கேட்டபோது, நான் எப்போதுமே ஒரு நவீன பெண். திருமணம் தடைபட்டதற்கு பல காரணங்கள் உள்ளது. என்றாலும் எனது முன்னால் நண்பர்களை நான் பகைத்துக் கொள்வதில்லை. தொடர்ந்து அவர்களுடன் நட்பை கடைபிடித்து வருகிறேன். அந்த வகையில் ரஷித் ஷெட்டி மற்றும் அவரது குடும்பத்தினருடன் இப்போதும் நல்ல நட்பில் இருக்கிறேன். எங்கள் நட்பு தொடரும் என்று கூறியுள்ளார் ராஷ்மிகா மந்தனா.




