இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
'பொன்னியின் செல்வன்' படம் வந்த பிறகு அந்தப் படத்தில் உள்ள பல கதாபாத்திரங்களைப் பற்றியும், அதில் நடித்தவர்களைப் பற்றியும் பலரும் பேசி வருகிறார்கள். ஆனால், படம் ஆரம்பிப்பதற்கு முன்பாக 'குந்தவை' கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிக்கிறார் என்றதும் எதிர்க் குரல்கள் எழுந்து அவரா என அதிர்ச்சி கமெண்ட்களை அளித்தவர்கள் பலர். ஆனால், அந்த எதிர்க்குரல்களை, அதிர்ச்சிகளை இப்போது பாராட்டுக் குரல்களாகவும், ஆச்சரியக் கமெண்ட்டுகளாகவும் தனது நடிப்பால் மாற்றியுள்ளார் த்ரிஷா.
20 வருடங்களுக்கு முன்பு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் மாடலிங் துறையில் நுழைந்தவர் த்ரிஷா. டிவியில் தொகுப்பாளராகப் பணியாற்றி, ஒரு படத்தில் ஒரே ஒரு காட்சியில் வந்து போனவர், கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்பது சாதாரண விஷயமல்ல.
தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் பல சூப்பர் ஹிட் படங்களிலும், பல முன்னணி ஹீரோக்களுடனும் நடித்தவர். ஒரு கட்டத்தில் தெலுங்கு சினிமாவை விட்டு விலகினார். தமிழிலும் சில படங்களில் மட்டுமே நடிப்பதைத் தொடர்ந்தார். 2018ல் வெளிவந்த '96' படம் அவரை 'ஜானு, ஜானு' என ரசிகர்களால் தூக்கிக் கொண்டாட வைத்தது. அதற்கு முன்பு அவர் எத்தனையோ கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் 'ஜானு' கதாபாத்திரம் மறக்க முடியாத ஒரு கதாபாத்திரமாக அமைந்தது. இந்தப்படம் இன்றோடு வெளியாகி 4 ஆண்டுகள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்குப் பிறகு இப்போது 'பொன்னியின் செல்வன்' படத்தின் குந்தவை கதாபாத்திரம் அமைந்துள்ளது. தமிழில் தொடர்ச்சியாகப் பேசத் தடுமாறுபவர் இப்படத்தில் சொந்தக் குரலில் அந்தக் காலத் தமிழையும் சரியாக உச்சரித்து பாராட்டப்படுகிறார். ஒரு குறிப்பிட்ட வயதைக் கடந்தவுடன் கதாநாயகிகளுக்கு கட்டாய ஓய்வு கொடுக்கும் தமிழ் சினிமா நாற்பது வயதைத் தொட்டுள்ள த்ரிஷாவுக்கு விதவிதமான கதாபாத்திரங்களைக் கொடுத்து இன்றும் இளவரசியாக அழகு பார்க்கிறது.