வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
சினிமா பாடலாசிரியரான சினேகனுக்கும் சின்னத்திரை நடிகை ஜெயலெட்சுமிக்கும் இடையே சமீபத்தில் சினேகம் அறக்கட்டளை தொடர்பான விவகாரத்தில் பிரச்னை எழுந்தது. இதனையடுத்து அறக்கட்டளையின் மூலம் பணம் மோசடி செய்ததாக கூறி ஜெயலெட்சுமி மீது சினேகன் புகார் கொடுத்தார். பதிலுக்கு அது பொய்யான குற்றச்சாட்டு என ஜெயலெட்சுமியும் புகார் அளித்தார். இதனையடுத்து போலீஸார் இருவரையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெயலெட்சுமி சினேகன் மீது எப்ஐஆர் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கூறினார். அப்போது, 'சினேகம் அறக்கட்டளை மூலம் பணமோசடி செய்ததாக சினேகன் என் மீது பொய் புகார் கொடுத்துள்ளார். எந்தவித ஆதாரமும் இல்லாமல் அவர் என் மீது பொய்யான புகாரை கொடுத்துள்ளார். மேலும், இது தொடர்பில் அவர் என்னிடம் பேச வந்தபோது அவரை நான் தனிமையில் காபி சாப்பிட அழைத்ததாகவும் பொய் கூறி வருகிறார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனவே, நீதி வேண்டி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். தற்போது என் மீது பொய் புகார் அளித்ததற்காகவும், அவதூறாக பேசியதற்காகவும் சினேகன் மீது எப்ஐஆர் பதிவு செய்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது சமூகவலைத்தளத்தில் என்னை பற்றி அவதூறாக பேசி வரும் அனைவருக்கும் பொருந்தும்' என்றும் ஜெயலெட்சுமி கூறியுள்ளார்.