ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து திரைக்கு வந்துள்ள வெந்து தணிந்தது காடு படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் முத்து என்ற கேரக்டரில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் சிம்பு. இந்நிலையில் தற்போது வெந்து தணிந்தது காடு படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் பாடல், சண்டை காட்சிகள் எடிட்டிங் உருவான விதத்தை படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரித்து உள்ளார்கள். மேலும் தற்போது வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை எழுதும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் இப்படத்தின் முதல் பாகத்தில் ஆக்சன் காட்சிகள் குறைவாக இருந்ததாக சிம்பு ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள். அதையடுத்து, இப்படத்தில் முத்து என்ற கேரக்டர் எப்படி டான் ஆகிறான் என்பதுதான் கதையாக இருந்தது. அதன் காரணமாகவே ஆக்சன் காட்சிகள் அதிகமாக இடம்பெறவில்லை. அடுத்த பாகத்தில் சண்டை மற்றும் மாஸான காட்சிகள் அதிகம் இடம் பெறும் என்று ரசிகர்களுக்கு தெரிவித்திருக்கிறார் சிம்பு.