பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
90களில் பிசியாக இருந்தவர் நடிகர் ராமராஜன். அவர் நடித்த படங்கள் 100 நாட்கள், வெள்ளி விழா என தொடர் வெற்றிகளை கண்டது. கரகாட்டக்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன், நம்ம ஊரு நல்ல ஊரு ஆகியவை முக்கியமான படங்கள் கடைசியாக 2012ம் ஆண்டு மேதை படத்தில் நடித்தார். தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் சாமானியன் என்ற படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
இந்த படத்தில் ராதாரவி மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். நக்ஷரா என்ற புதுமுகம் ஹீரோயின். அச்சு ராஜாமணி இசையில் உருவாகும் இப்படத்திற்கு அருள் செல்வன் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.ராகேஷ் இயக்குகிறார். எக்ஸ்ட்ரா எண்டர்டெயின்மென்ட் சார்பில் மதியழகன் தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் தயாராகிறது. இது ராமராஜனின் 45வது படம். இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று இரவு நடந்தது.
விழாவில் கலந்து கொண்டு ராமராஜன் பேசியதாவது : 10 வருடங்களுக்கு பிறகு நடிக்க வந்திருக்கிறேன். தொடர்ந்து நடித்திருப்பேன், ஆனால் அரசியல் பணிகள் வந்தது, ஒரு பெரிய விபத்தில் சிக்கி ஒரு வருடத்திற்கு மேல் ஓய்வெடுக்க வேண்டியதாகி விட்டது. அதன்பிறகு பலரும் வந்து என்னிடம் கதை சொன்னார்கள், நடிக்க அழைத்தார்கள், கோலிசோடா 2, கரகாட்டக்காரன் 2 படங்களில் நடிக்க கேட்டார்கள். எனக்கு இரண்டாம் பாக கதைகளில் நடிக்க விருப்பமில்லை என்று சொல்லிவிட்டேன்.
நான் 'மக்கள் நாயகன்' என்று பெயர் எடுத்தவன். எனவே மக்களுக்கு பயனுள்ள படங்களில்தான் நடிப்பேன். கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் தரமற்ற படங்களில் நடிக்க மாட்டேன். நான் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்ற எங்கேயும் சொன்னதில்லை. அப்படி யாரோ சொல்லி பரவியது. சரி அதுவும் நியாயம்தான் என்று நானும் அமைதியாக இருந்து விட்டேன். இப்போதெல்லாம் கதைதான் ஹீரோ. நல்ல கதையோடு வந்தால் தொடர்ந்து நடிப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.