அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' | பிளாஷ்பேக் : சொந்த வாழ்க்கை கதையில் நடித்த சுதா சந்திரன் | பிளாஷ்பேக் : பத்மினி சகோதரிகள் போல், நாட்டியத்தில் ஜொலித்த சாயி சகோதரிகள் |

கவின் கிரியேட்டர்ஸ் சார்பில் வி.எஸ்.பாளையம், எஸ்.கிருஷ்ணமூர்த்தி தயாரிக்கும் படம் நெடுநீர். ராஜ்கிருஷ்ணன், இந்துஜா, மாகிரா சத்யா முருகன், மதுரை மோகன், எஸ்.கே.மின்னல் ராஜா, டி.கல்லேரி கே.கனகராஜ், கவுஷிக், மாணிக் சுப்ரமணியம் உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கிறார்கள். லெனின் சந்திரசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். ஹித்தேஷ் முருகவேல் இசை அமைக்கிறார். கு.கி.பத்மநாபன் இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறியதாவது: கடலின் அழகு, கடலின் ஆழம், கடலின் ஆர்ப்பரிப்பு, கடலின் மர்மம், கடலின் அமைதி, கடலின் பிரம்மாண்டம் இதுவே நெடுநீர். பதின் பருவ சிறுவனும், சிறுமியும் சூழலால் துரத்தப்பட்டு தமது சொந்த கிராமத்தை விட்டு வெளியேறுகின்றனர். எங்கு செல்வது எப்படி செல்வது என எந்த இலக்குமின்றி பயணிக்கின்றனர். இந்த சூழலில் நள்ளிரவில் நடுவழியில் இருவரும் பிரிய நேர்கிறது. 8 வருடங்கள் கழித்து கடலூரில் இருவரும் சந்திக்க நேர்கிறது. ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளராக உயிரைக் காப்பாற்றும் இடத்தில் அவள், உள்ளூர் தாதாவின் அடியாளாக உயிரைக் கொல்லும் இடத்தில் அவன். இனி என்ன ஆகும் என்பதுதான் படத்தின் கதை.




