'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி |
தனுஷ் படத்தில் சிம்புவை மறைமுகமாகத் தாக்குவதும், சிம்பு படத்தில் தனுஷை மறைமுகமாகத் தாக்குவதும் என இருவரது ரசிகர்களுக்கும் போட்டியை ஏற்படுத்தி படக்குழுவினரே குளிர் காய்கிறார்கள்.
இன்று வெளியான சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' படத்தில் கூட தனுஷின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கும் விதமாக தன்னை விட நான்கு வயது மூத்த பெண்ணைக் காதலிக்கிறார் சிம்பு. காதலி சித்தி இட்னானியை சந்தித்துப் பேசும் காட்சியில் வயது வித்தியாசம் பற்றிய வசனங்களும் உண்டு. ரசிகர்கள் புரிந்து கொண்டு கை தட்டி ரசிக்கிறார்கள். கவுதம் மேனன் படத்தில் இப்படி தனிப்பட்ட வெறுப்பை விதைக்கும் காட்சியா என்று அதிர்ச்சியாகவே உள்ளது.
இன்று சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' வெளியாகியுள்ள தினத்தில் தனுஷ் நடித்து இந்த மாதம் வெளிவர உள்ள 'நானே வருவேன்' படத்தின் டீசரை வெளியிடுகிறார்கள். மாலை 6.40 மணிக்கு இந்த டீசர் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கில் டீசரை வெளியிடுகிறார்கள்.
'நானே வருவேன்' டீசர் வெளியான பின் வரும் பேச்சுக்கள் 'வெந்து தணிந்தது காடு' படம் பற்றிய பேச்சுக்களை மீறி பரபரப்பை ஏற்படுத்துமா ?.