மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் | முழு நீள போலீஸ் வேடத்தில் நடிக்க விஜய் தேவரகொண்டா ஆர்வம் | துல்கர் சல்மானின் ‛காந்தா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | கமல் படத்தில் இணைந்த பிரபல ஒளிப்பதிவாளர் | உஸ்தாத் பகத்சிங் படத்தின் படப்பிடிப்பை முடித்த பவன் கல்யாண் | பிளாஷ்பேக்: 'விமர்சனப் போட்டி' என்று விளம்பரம் செய்து, விடை தெரியாமல் போன “உலகம்” திரைப்படம் | 'ஹவுஸ் மேட்ஸ்' மூலம் தமிழுக்கு வரும் அர்ஷா பைஜு | ரஜினி நடிக்கும் கூலி படக்கதை என்ன? ஆகஸ்ட் 2ல் டிரைலரில் தெரியும்...! |
சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை தழுவி கேப்டன் பிரபாகரன் முதல் ஏராளமான படங்கள் வெளிவந்திருக்கிறது. சின்னத்திரை தொடர்களும் வெளிவந்திருக்கிறது. இந்த நிலையில் தற்போது வீரப்பனின் முழு வாழ்க்கையும் வெப் தொடராக தயாராகிறது. இதனை ஏற்கெனவே வீரப்பனின் வாழ்க்கையை கன்னடத்தில் வீரப்பன் அட்டகாஹசா என்ற பெயரிலும், தமிழில் வனயுத்தம் என்ற பெயரிலும் படமாக இயக்கிய ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்குகிறார். இந்த தொடரும் கன்னடம், தமிழில் தயாராகிறது. கிஷோர் வீரப்பனாக நடித்து வருகிறார். பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமாராக நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்புகள் தற்போது சத்தியமங்கலம் வனப்பகுதியில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த வெப் தொடருக்கு தடை கேட்டு வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி வழக்கு தொடர்ந்துள்ளார். பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் ஏற்கெனவே ஏ.எம்.ஆர் ரமேஷ் வீரப்பனை கொடுமைக்காரனாக சித்தரித்து வீரப்பன் அட்டஹாசா என்ற தலைப்பில் படமாக இயக்கினார். இப்போது மீண்டும் அதனை தொடராக இயக்குகிறார். தொடரின் முழு ஸ்கிரிப்டும் எனக்கு வழங்கப்பட வேண்டும், என் அனுமதியின்றி படமாக்க கூடாது. என்று அந்த மனுவில் கூறியிருக்கிறார்.