மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
மணிரத்னம் தனது கனவு படமான பொன்னியின் செல்வனை இரண்டு பாகங்களாக இயக்கி முடித்து விட்டார். இப்படத்தின் முதல் பாகம் 30ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். இந்த நிலையில் நடிகை அமலாபால் அளித்த ஒரு பேட்டியில், பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்கு இரண்டு முறை வாய்ப்பு கிடைத்தும் தான் தவற விட்டு விட்டதாக தெரிவித்திருக்கிறார்.
அது குறித்து அவர் கூறுகையில், ‛‛பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்கு முதலில் என்னை அழைத்து ஆடிஷன் செய்தார்கள். ஆனால் அதையடுத்து படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. பின்னர் மீண்டும் அந்த படத்தை தொடங்கயிருந்தபோது எனக்கு அழைப்பு விடுத்தார் மணிரத்னம். ஆனால் பொன்னியின் செல்வன் படத்தில் அவர் எனக்கு கொடுத்த வேடத்தில் நடிப்பதற்கு மனதளவில் நான் தயாராக இல்லை. அதன் காரணமாக அந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ள அமலா பால், அந்த வேடத்தில் நடிக்காதது எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் அந்த வேடத்தில் நான் நடிக்காததற்கு சில காரணங்கள் உள்ளது என்றும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் அமலாபால் .