லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
'டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள்' என இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்த அஜய் ஞானமுத்து அடுத்து இயக்கியுள்ள படம் 'கோப்ரா'. ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விக்ரம், 'கேஜிஎப்' படத்தின் கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளின ரவி, இர்பான் பதான், கேஎஸ் ரவிக்குமார், மீனாட்சி கோவிந்தராஜ் மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படம் அடுத்த வாரம் விநாயகர் சதுர்த்தி தினமான ஆகஸ்ட் 31ம் தேதியன்று வெளியாகிறது.
இப்படத்தின் டிரைலர் நேற்று யு டியுபில் வெளியிடப்பட்டது. 24 மணி நேரத்தில் இந்த டிரைலர் 70 மில்லியன் பார்வைகளை யு டியுபில் பெற்றுள்ளது. அது மட்டுமல்ல டிரெண்டிங்கிலும் முதலிடத்தில் உள்ளது. ஒரு மாறுபட்ட ஆக்ஷன் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் பல வித தோற்றங்களில் விக்ரம் நடித்துள்ளார்.
விக்ரம் நடித்து வெளிவந்த மாறுபட்ட கமர்ஷியல் படங்களான அந்நியன், ஐ, இருமுகன்' படங்களின் வரிசையில் இந்தப்பமும் சேர வாய்ப்புள்ளது. விக்ரம் நடித்து கடைசியாக வெளிவந்த 'ஸ்கெட்ச், சாமி ஸ்கொயர், கடாரம் கொண்டான்' கமர்ஷியல் ரீதியாக சரியாகப் போகவில்லை. அதையும் 'கோப்ரா' மாற்றுமா என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும்.