மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கு முன்னணி நடிகரான சர்வானந்த், தமிழில் காதல்னா சும்மா இல்ல, நாளை நமதே படங்களில் நடித்திருந்தாலும் எங்கேயும் எப்போதும் படம்தான் அவரை திரும்பி பார்க்க வைத்தது. கடைசியாக ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை படத்தில் நடித்தார். தற்போது 10 வருடங்களுக்கு பிறகு கணம் படத்தின் மூலம் தமிழுக்கு மீண்டும் வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: நிறைய ஆசைகளோடுதான் தமிழ் சினிமாவுக்கு வந்தேன். ஆனால் நான் எதிர்பார்த்தது நடக்கவில்லை. கடைசியாக நடித்த ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படத்தை சேரன் இயக்கினார். மிகுந்த எதிர்பார்ப்புடன் அந்த படத்தை நம்பினேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த படம் தியேட்டரில் வெளியாகவில்லை. அதனால் அது மக்களை சென்று சேரவில்லை. இதனால் அடுத்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதன்பிறகு நானும் தெலுங்கில் பிசியாகி விட்டேன்.என்றாலும் தமிழ் படங்களை தொடர்ந்து பார்த்து வந்தேன்.
தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு எனது நெருங்கிய நண்பர் மீண்டும் தமிழ்படத்தில் நடிக்க வேண்டும் என்று என்னை விட அவர்தான் அதிக ஆர்வமாக இருந்தார். நிறைய கதைகளை எனக்கு அனுப்பினார். தமிழில் மீண்டும் நடித்தால் நல்ல படத்தில்தான் நடிக்க வேண்டும் என்கிற முடிவோடு இந்தேன். அப்படியொரு கதையாக கணம் படம் அமைந்ததால் நடிக்க சம்மதித்தேன்.
தெலுங்கில் நான் ஆக்ஷன் ஹீரோவாக பெயர் எடுத்திருந்தாலும் புதிய முயற்சிக்கு ஆதரவு தரவேண்டும் என்பதற்காக அம்மா சென்டிமென்டை மையமாக கொண்ட இந்த படத்தில் நடிக்கிறேன். இந்த படம் தமிழ் மக்களுக்கு பிடிக்கும், தொடர்ந்து தமிழில் நடிப்பேன் என்று நம்புகிறேன். என்றார் சர்வானந்த்.