'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் | பிளாஷ்பேக்: தாமதத்தால் ஏற்பட்ட 4 பெரும் இழப்புகள் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' |
'பாகுபலி' வில்லனான ராணா டகுபட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவுகள் அனைத்தையும் திடீரென 'டெலிட்' செய்துள்ளார். அவரது இந்த செயல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 4.7 மில்லியன் பாலோயர்கள் ராணாவுக்கு உள்ளார்கள்.
தெலுங்கில் முக்கியமான கதாநாயகர்களில் ஒருவராக இருக்கிறார். அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'விராட பர்வம்' படம் சுமாராகத்தான் ஓடியது. அப்படத்தின் பிரமோஷனுக்குப் பிறகு அவர் மீடியா பக்கம் வருவதில்லை.
இந்நிலையில் ராணா டகுபட்டி தன்னுடைய இரண்டாம் ஆண்டு திருமண நாளை மனைவி மிஹீகாவுடன் கொண்டாடியுள்ளார். தற்போது இந்த ஜோடி ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. நேற்று தங்களது திருமண நாளைக் கொண்டாடிய புகைப்படங்களை மட்டும் ராணாவின் மனைவி மிஹீகா பதிவிட்டுள்ளார். அதில் தனது கணவர் ராணாவையும் 'டேக்' செய்துள்ளார்.
தனது இன்ஸ்டாவில் அனைத்துப் பதிவுகளையும் டெலிட் செய்துள்ள ராணா தனது திருமண நாள் கொண்டாட்டப் புகைப்படங்களைக் கூட அவரது கணக்கில் பதிவிடவில்லை. 'விராட பர்வம்' படத்திற்குப் பிறகு வேறு எந்தப் படத்திலும் நடிக்க ராணா இன்னும் சம்மதிக்கவில்லை.