ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர், தற்போது தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். தெலுங்குத் திரையுலகில் தற்போது ஸ்டிரைக் நடந்து வருவதால் அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால், அவர் இயக்க ஆரம்பித்து பாதியில் நின்று போன 'இந்தியன் 2' படத்திற்கான திட்டமிடல் வேலைகளில் தற்போது இறங்கியுள்ளாராம். தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளதாம். இருப்பினும் செப்டம்பர் மாதத்தில் 'இந்தியன் 2' படப்பிடிப்பை நடத்தும்படி கமல்ஹாசன் தரப்பில் சொல்லப்பட்டுள்ளதாம்.
லைக்கா தயாரிக்கும் இப்படத்தின் தயாரிப்புப் பணிகளில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்துள்ளது. அதனால் படப்பிடிப்பை மேலும் தள்ளி வைக்க ஷங்கருக்கு வாய்ப்பில்லை. தற்போது படத்தில் சில மாற்றங்களையும் செய்துள்ளாராம் ஷங்கர். புதிதாக நடிகர் சத்யராஜும் படத்தில் இணைகிறாராம். அவருக்காக புதிய கதாபாத்திரம் ஒன்றை படத்தில் உருவாக்கியிருக்கிறார்களாம். இன்னொரு பக்கம் 80களின் முன்னணி கதாநாயகனான கார்த்திக்கும் படத்தில் இணையப் போகிறார் என்கிறார்கள்.
படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகும் போது புதிதாக இணைந்துள்ள நடிகர்கள் யார் என்ற அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாம்.