தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா | எக்ஸ் தளம் நெகட்டிவிட்டி நிறைந்தது : ரவி தேஜா கருத்து | ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? | ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? |
தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் வரை நடிகை ராஷ்மிகாவின் புகழ் கொடிகட்டி பறக்கிறது. தென்னிந்திய படங்கள் மட்டுமல்லாது ஹிந்தி படங்களிலும் தற்போது நடித்து வரும் ராஷ்மிகா, அடிக்கடி ஏர்போர்ட்டுக்கு செல்வது, ஜிம்மிற்கு செல்வது, செல்லப்பிராணிகளை கொஞ்சுவது என ஏதாவது புகைப்படங்களையும், வீடியோக்களையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டு ரசிகர்களுடன் தொடர்பிலேயே இருந்து வருகிறார். இந்த நிலையில் நண்பர்கள் தினத்தை முன்னிட்டு தன்னுடைய நெருங்கிய நண்பர்களுடன் அதை கொண்டாடிய ராஷ்மிகா அந்த புகைப்படத்தையும் தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, "வழக்கமாக நான் நண்பர்கள் தினம், சாக்லேட் தினம், காதலர் தினம் என எதையுமே சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. அதேசமயம் இந்த புகைப்படத்தில் இருக்கும் எனது நண்பர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க விரும்புவதற்காக தான் இந்த கொண்டாட்டம். என்னுடைய வாழ்க்கையில் இவர்கள் எவ்வளவு முக்கியம் என்பதை சொல்வதற்காகவே இது. நான் படித்த சிலருடன், பணியாற்றிய சிலருடன், வளர்ந்த சிலருடன், தற்போது கூட அடிக்கடி தொடர்பில் இல்லாத இன்னும் சிலருடன் ஆனால் அதே சமயம் அந்த நட்பை ஆழமாக பேணி வரும் இவர்கள்தான் என் மனதிற்கு மிக நெருக்கமானவர்கள். இவர்கள் எப்போதுமே எனக்கு ஸ்பெஷல். இவர்கள் என் இதயத்தின் ஒரு பகுதி என்று சொன்னால் அது மிகையல்ல" என்று கூறியுள்ளார்.