டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி |
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் இசையமைப்பதற்கு தனது முழு நேரத்தையும் ஒதுக்கியதால் மற்ற தென்னிந்திய மொழி படங்களில் பெரிய அளவில் அவரால் பங்களிப்பை தர இயலவில்லை. அந்த வகையில் மலையாளத்தில் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடிப்பில் வெளியான யோதா என்கிற படத்திற்கு மட்டும் இசையமைத்திருந்தார் ஏஆர் ரஹ்மான். இந்த நிலையில் பிரித்விராஜ் நடிப்பில் தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் ஆடுஜீவிதம் படத்திற்கு அவர்தான் இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தின் மூலம் தான் அவர் மலையாள திரையுலகில் ரீ என்ட்ரி கொடுக்கிறார் என சொல்லப்பட்டு வந்தது. அதே சமயம் தற்போது மலையாளத்தில் பஹத் பாசில் நடிக்கும் மலையான் குஞ்சு என்கிற படத்திற்கும் ஏ.ஆர் ரஹ்மான் தான் இசையமைத்துள்ளார். ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்க, அறிமுக இயக்குனர் சஜிமோன் பிரபாகரன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படம் வரும் ஜூலை-22ல் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து சோளப்பெண்ணே என்கிற பாடல் வீடியோ வெளியாகி உள்ளது. கிராமத்தில் இளம்பெண்ணுக்கு செய்யப்படும் திருமண சடங்குகளை மையப்படுத்தி மெலடி பாணியில் இந்த பாடலை உருவாக்கியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். அந்த வகையில் 30 வருடங்களுக்கு பிறகு ஏ.ஆர் ரஹ்மானின் மலையாள ரீ என்ட்ரி படம் என்கிற பெருமையை மலையான் குஞ்சு படம் தட்டிச் சென்றுள்ளது.