அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' | பிளாஷ்பேக்: விஜயகாந்த், கமல் இணைந்து நடித்த ஒரே படம் | பிளாஷ்பேக்: தம்பியை இயக்குனராக்கி அழகு பார்த்த அக்கா |
நடிகர் நாசருக்கு உடல் ரீதியாக பல பிரச்சினைகள் இருப்பதாகவும், இதனால் அவர் நடிப்பில் இருந்து ஒதுங்க இருப்பதாகவும் சமீப நாட்களாக தகவல் வெளியாகி வந்தது. இதற்கு பதில் அளித்து நாசர் கூறியிருப்பதாவது:
என்னை பற்றி தவறான தகவல் பரவி உள்ளது. சினிமாவை விட்டு விலகும் எண்ணம் இருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. நான் அதிக படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறேன். தொடர்ந்து நடிப்பேன். தற்போது 3 தமிழ் படங்களில் நடித்து வருகிறேன். 3 இந்தி படங்களிலும், ஒரு இந்தி வெப் தொடரிலும் நடிக்கிறேன். 3 தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறேன். எனவே தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம். என்று கூறியிருக்கிறார்.
நாசரின் மனைவியும், தயாரிப்பாளருமான கமீலா நாசர் தனது டுவிட்டரில் "நாசரின் உடல்நிலை, நடிப்புத் தொழிலை விட்டு விலகுவது போன்ற . தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.