10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' | 'பெத்தி' படத்தில் சிவராஜ் குமார் முதல் பார்வை வெளியீடு | ‛பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீ மேக்கான ‛தடக் 2' டிரைலர் வெளியீடு, ஆக., 1ல் ரிலீஸ் | சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் நடித்த கேரக்டர்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இதில் பகத் பாசில் நடித்த அமர் என்ற கேரக்டரை மேலும் டெவலப் செய்து ஒரு புதிய கதையை உருவாக்க போகிறாராம் லோகேஷ் கனகராஜ். ஏற்கனவே விக்ரம் படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கத் திட்டமிட்டுள்ள அவர், அதில் தொடர்புள்ள இந்த அமர் கேரக்டரின் இன்னொரு பரிமாணத்தை அந்த கதையில் சொல்லப் போகிறாராம்.
இது அமர் கேரக்டரின் முந்தைய காலகட்ட கதையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதனால் கைதி மற்றும் விக்ரம் படங்களின் தொடர்புள்ள காட்சிகளும் இந்த கதைக் களத்தில் இடம்பெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விக்ரம் படத்தை அடுத்து விஜய்யின் 67வது படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள லோகேஷ் கனகராஜ், அதன் பிறகு இந்த கதையை இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.