புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தெலுங்குத் திரையுலகத்தின் பரபரப்பான காதல் ஜோடியாக இருந்து கல்யாணம் செய்து கொண்டு சீக்கிரத்திலேயே பிரிந்த ஜோடி சமந்தா, நாக சைதன்யா ஜோடி.
நாக சைதன்யா தற்போது ஷோபிதா துலிபலா என்ற நடிகையைக் காதலித்து வருவதாக தெலுங்கு மீடியாக்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த செய்திகளை சமந்தாவின் பிஆர் டீம் பரப்பி வருவதாக நாக சைதன்யா ரசிகர்கள் குற்றம் சாட்டுவதாகவும் செய்திகள் வந்துள்ளன.
இது பற்றிய செய்தி ஒன்றைப் பகிர்ந்து சமந்தா காட்டமான பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். “பெண் பற்றிய வதந்திகள் உண்மையாக இருக்க வேண்டும். ஆண் பற்றிய வதந்தி பெண்களால் விதைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். வளருங்கள்…சம்பந்தப்பட்டவர்கள் நகர்ந்து விட்டார்கள், நீங்களும் நகருங்கள். உங்கள் வேலைகளில் கவனம் செலுத்துங்கள், உங்கள் குடும்பத்தை கவனியுங்கள், போங்கள்,” என்று காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.
ஷோபிதா துலிபலா சமீபத்தில் வெளிவந்த தெலுங்குப் படமான 'மேஜர்' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சில ஹிந்தி, மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.