ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
மாதவன் தயாரித்து, நடித்து, இயக்கி உள்ள படம் ‛ராக்கெட்டரி: நம்பி எபெக்ட்'. இது ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டு பின்பு நிரபராதி என்று நிரூபிக்கப்பட்ட ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை கதை.
ஒரே நேரத்தில் ஹிந்தி, தமிழ், ஆங்கில மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளிலும் வெளியாகிறது. நடிகர் மாதவன், நம்பி நாராயணனாக நடித்துள்ளார். சிம்ரன், பிலிஸ் லோகன், வின்சென்ட் ரியோட்டா, ரான் டொனைச்சே, ரஜித் கபூர், ரவி ராகவேந்திரா, மிஷா கோஷல், குல்ஷன் குரோவர், கார்த்திக் குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். வருகிற ஜூலை 1ம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் விளம்பர பலகையான, அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் டைம்ஸ் ஸ்கொயரில் அமைந்துள்ள நாஸ்டாக் டிஜிட்டல் விளம்பர பலகையில் இந்தப் படத்தின் டிரைலர் ஒளிபரப்பட்டது. அப்போது ஏராளமான இந்தியர்கள் அதை கண்டு களித்தனர். அவர்களுடன் மாதவனும், விஞ்ஞானி நம்பி நாராயணனும் அங்கே இருந்தார்கள்.