அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு |
2019ம் ஆண்டு ஒந்து கதை ஹெல என்ற கன்னடப் படத்தில் அறிமுகமானவர் தமிழ்நாட்டு நடிகையான பிரியங்கா அருள் மோகன். அதையடுத்து தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்தவர், பின்னர் தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் போன்ற படங்களில் நடித்த பிரியங்கா மோகன், அடுத்தபடியாக நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 169வது படத்திலும், ராஜேஷ்.எம் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படத்திலும் கமிட்டாகியிருக்கிறார்.
இந்த நிலையில் மீண்டும் தெலுங்குக்கு செல்லும் பிரியங்கா மோகன், மகேஷ்பாபு நடிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு முன்பு தெலுங்கில் நானி, சர்வானந்துடன் ஜோடி சேர்ந்தவர், இப்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகருடன் இணைந்திருப்பதால் டோலிவுட்டில் முன்வரிசை நடிகை பட்டியலில் இணைந்திருக்கிறார் பிரியங்கா மோகன்.