ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

தென்னிந்திய படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ். மகாநடி படத்திற்காக தேசிய விருது பெற்றவருக்கு அதன்பிறகு தமிழ், தெலுங்கில் சூப்பர் ஸ்டார்களுடன் நடித்த படங்களும் ஹிட் படங்களாக அமையவில்லை. இதனால் வித்தியாசமான கதை தேடலில் ஈடுபட்டு இருப்பதாக கூறும் கீர்த்தி சுரேஷ், தான் அளித்த ஒரு பேட்டியில், தேசிய விருது பெற்று விட்டபோதும் என்னுடைய நடிப்பு இன்னமும் எனக்கு திருப்தி அளிக்கவில்லை. நான் நடித்த படங்களை பார்க்கும்போது அதில் நிறைய குறைகள் இருப்பதாக அறிகிறேன்.
அதன் காரணமாகவே பெரும்பாலும் நான் நடித்த படங்களில் நான் பார்ப்பதில்லை. காரணம் நான் செய்த தவறுகள் மீண்டும் மீண்டும் என் கண்முன்னே வந்து செல்லும். இதை விட இன்னும் சிறப்பாக நடித்திருக்கலாமே என்று மனதுக்குள் அசை போட்டுக் கொண்டே இருப்பேன் என்று கூறியுள்ள கீர்த்தி சுரேஷ், நடிப்பின் மீது எனக்கு தீராத காதல் உள்ளது. அதனால் இன்னும் நிறைய மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியுள்ளது என்று கூறி இருக்கிறார்.




