ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள ஏராளமான படங்கள் ரிலீசுக்கு வரிசைகட்டி நிற்கிறது. மேலும் சில படங்களில் தற்போது மிரட்டல் வில்லனாகவும் நடித்து வருகிறார். தமிழில் மாஸ்டர் படத்திலும், தெலுங்கில் உப்பேனா படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார். தற்போது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'விக்ரம்' படத்திலும் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.
இந்நிலையில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாவுக்கு வில்லனாக விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இயக்குனர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ்பாபு புதிய படத்தில் நடிக்க உள்ளார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.
அந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.