4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் |

அழகிய தீயே, பொன்னியின் செல்வன், மொழி, அபியும் நானும், பிருந்தாவன், 60 வயது மாநிறம் உள்பட பல சென்டிமெண்ட் கலந்த மென்மையான படங்களை இயக்கியவர் ராதாமோகன். பயணம், கவுரவ் போன்ற ஆக்ஷன் படங்களையும் இயக்கி உள்ளார். முதன்முதலாக அவர் இயக்கி உள்ள ரொமாண்டிக் த்ரில்லர் படம் பொம்மை.
மான்ஸ்டர் படத்திற்கு பிறகு இதில் எஸ்.ஜே.சூர்யாவும், பிரியா பவானி சங்கரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். இவர்கள் தவிர சாந்தினி தமிழரசன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சிறு வயதிலிருந்தே வித்தியாசமான மனநிலையை கொண்டவரான எஸ்.ஜே.சூர்யா ஜவுளிக் கடைகளுக்கு தேவையான பொம்மைகள் செய்வதில் கைத்தேர்ந்தவர். அவர் உருவாக்கும் ஒரு அழகான பெண் பொம்மைக்கு உயிர் இருப்பதாக நம்பி அதை தீவிரமாக காதலிக்கிறார். அந்த காதலுக்கு வெளியில் இருந்து பிரச்னை வருவதாக நம்புகிறார். இதனால் அவர் என்ன மாதிரியான காரியங்களில் இறங்குகிறார். அதன் முடிவு என்ன என்பது படத்தின் கதை என்கிறார்கள்.
இந்த "பொம்மை" பட டிரைலர் உலகம் முழுதும் சுமார் 600 திரை அரங்குகளில் வெளியாகிறது. கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் உருவாக்கத்தில் உருவான "விக்ரம்" படம் வெளியாகும் திரை அரங்குகளில் ஜூன் 3ம் தேதி "பொம்மை" படத்தின் டிரைலர் வெளியிடுவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. பொம்மை படத்தின் சிங்கள் டிராக் வெளியீடு, பாடல்கள் வெளியீடு, பட வெளியீடு குறித்த செய்திகள் பின்னர் தெரிவிக்கப்படும்.




