வீர தீர சூரன் ஓடிடி வாங்கிய விலை இவ்ளோதானா? | ஓடிடி-யில் பெரும் விலைக்கு மோகன்லாலின் எல் 2 :எம்புரான் | புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு |
1976ம் ஆண்டு மே மாதம் 14ம் தேதி வெளிவந்த அன்னக்கிளி படம் மூலம் ஆரம்பமான இளையராஜா என்ற இசை மேதையின் இசைப் பயணம் 46 ஆண்டுகளைக் கடந்தும் நம்மை கட்டிப் போட்டு வைத்துக் கொண்டிருக்கிறது. சினிமாவில் தான் இந்த 46 ஆண்டுகள், ஆனால், இப்படிப்பட்ட இசை மேதைகள் பிறந்ததிலிருந்தே மேதைகள் என அவருடன் பயணித்த பலரும் சொல்லக் கேட்டிருக்கிறோம்.
76ம் ஆண்டில் தன் பெயரிலான அதிகாரப்பூர்வ இசைப்பயணத்தை ஆரம்பித்த இளையராஜாவுக்கு இன்று 79வது பிறந்த நாள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்கள், ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள், எத்தனையோ பாடலாசிரியர்கள், பாடகர்கள், பாடகிகள், இசைக்கலைஞர்கள், கோடிக்கணக்கான ரசிகர்கள் என அவர் பதித்த தடங்கள் ஏராளம், ஏராளம்.
எத்தனை சர்ச்சைகள் வந்தாலும் அதையெல்லாம் கடந்து தன் இசையால் ஒவ்வொரு நொடியும் மக்களை தன்னிலை மறக்க வைப்பவர் இளையராஜா. உலகம் முழுவதும் இசைக்கு பல வடிவங்கள் உண்டு. அது போல இசையின் ஒரு வடிவம் என்று இளையராஜாவின் இசையையும் சொல்ல வேண்டும். சினிமா இசையிலும் பல புதுமைகளைப் புகுத்தியவர் அவர்.
கொரோனா காலங்களில் வீட்டிலேயே முடங்கி கிடந்தவர்களுக்கு நிச்சயம் இவரின் பாடல்களும், இசையும் மக்களை தாலாட்ட வைத்திருக்கும். இசை தெரிந்தவர்களும், ரசிக்கத் தெரிந்தவர்களும் இன்று இளையராஜாவுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக சமூகவலைதளங்களில் இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
மேலும் இளையராஜா பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களுக்கும் அருகில் உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் : https://cinema.dinamalar.com/ilayaraja/