நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
சின்னத்திரையிலிருந்து மேயாதமான் படம் மூலம் சினிமாவுக்கு வந்தவர் பிரியா பவானி சங்கர். அதையடுத்து கடைக்குட்டிசிங்கம், மான்ஸ்டர், மாபியா என பல படங்களில் நடித்தவர் தற்போது யானை, பத்து தலை, திருச்சிற்றம்பலம், ருத்ரன், பொம்மை என பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறா. இந்த நிலையில் பிரியா பவனி சங்கர் அளித்த ஒரு பேட்டியில், எல்லா நடிகைகளையும் போலவே எனக்கும் ரஜினி, விஜய், அஜித் என்று முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. சினிமாவில் இன்னும் பெரிய இடத்துக்கு வர வேண்டும் என்பதால் நடிப்பில் தற்போது தீவிரம் காட்டிக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ள பிரியா பவானி சங்கர், கல்லூரி படிப்பு முடித்ததும் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆக வேண்டும் என்று தான் திட்டமிட்டிருந்தேன். ஆனால் எதிர்பாராதவிதமாக சினிமாவில் நடிக்கத் தொடங்கியதால் திருமணம் தள்ளிப் போய்விட்டது என்று கூறி உள்ளார் பிரியா பவானி சங்கர்.