பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதி, நடிகர் தனுஷ் தங்கள் மகன் எனக்கூறி, மேலூர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை, ஐகோர்ட் மதுரை கிளை ரத்து செய்தது. நடிகர் தனுஷ் கல்வி மற்றும் பிறப்பு சான்றிதழ்களை போலியாக தாக்கல் செய்துள்ளார். எனவே, அவர் மீது குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி கதிரேசன், மதுரை ஜேஎம் 6 நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
தற்போது இந்த வழக்கில் தனுஷ் தாக்கல் செய்த பிறப்பு சான்றிதழை சென்னை மாநகராட்சிக்கு அனுப்பி உண்மை தன்மை பரிசோதிக்க வேண்டும் என்று மதுரை தம்பதியினர் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர். இதுவும் தள்ளுபடி செய்யப்பட்டாலோ, அல்லது தனுஷ் தாக்கல் செய்த பிறப்பு சான்றிதழ் உண்மைதான் என்று சென்னை மாநகராட்சி சான்றழித்தாலோ இந்த வழக்கு முழுமையாக முடிவுக்கு வந்து விடும்.
இந்நிலையில், நடிகர் தனுஷ் இந்த வழக்கின் காரணமாக தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் 10 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கேட்டு மேலூர் கதிரேசன் தம்பதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
இதற்கு தற்போது கதிரேசன் தம்பதிகள் பதில் அளித்துள்ளனர். அவர்கள் அனுப்பி உள்ள பதில் நோட்டீசில் கூறியிருப்பதாவது: தங்களின் குற்றச்சாட்டை நான் முழுமையாக மறுக்கிறேன். தாங்கள் கஸ்தூரி ராஜாவின் மகன் என்பதை என்னால் ஒருபோதும் ஏற்க முடியாது. எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் கடந்த 28.7.1983ல் பிறந்தீர்கள் என்பது தவறு. இந்த விவகாரத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்துள்ளீர்கள்.
தாங்கள் என்னுடைய மகன் என்பதில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை. இதற்காக 10 கோடி கேட்டு தாங்கள் அனுப்பிய நோட்டீசை திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால் தாங்கள் தொடரும் சிவில் மற்றும் குற்றவியல் வழக்கை சட்டப்படி நீதிமன்றத்தின் மூலம் எதிர்கொள்ள தயாராக உள்ளேன்.
இவ்வாறு அந்த பதில் நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.