டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் வருகிற 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பில் வெளியிடுகிறார்.
இந்நிலையில், விக்ரம் படத்தினை இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியிட தடை விதிக்க இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இது தொடர்பாக தாக்கல செய்யப்பட்ட மனுவில் "கமல், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை கொண்டு பெரும் பொருள் செலவில் எடுக்கப்பட்ட படம் இது. இணையத்தில் வெளியிட எந்த அனுமதியும் பட தயாரிப்பு நிறுவனம் வழங்கவில்லை. அனுமதியின்றி படம் வெளியானால் பெரும் நஷ்டம் ஏற்படும். மேலும் இது போன்ற அனுமதியின்றி படத்தை வெளியிடுவது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது. எனவே சட்டவிரோதமாக யாரும் வெளியிடாமல் தடுக்க இணைய தள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் விக்ரம் படத்தை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடுவதற்கு தடைவிதித்து இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது. மேலும் மனு தொடர்பாக பி.எஸ்.என்.எல், ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 1ம் தேதிக்கு தள்ளிவைத்தது.




