அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
தமிழகத்தில் சினிமா, டிவி படப்பிடிப்புகளுடன் ஓடிடி தொடர்களுக்கான படப்பிடிப்புகளும் தற்போது அதிக அளவில் நடந்து வருகிறது. இதனால், சினிமா தொழிலாளர்களுக்கான தட்டுப்பாடு அதிக அளவில் இருந்து வருகிறது. வெளிப்புறப் படப்பிடிப்புகளை நடத்துவதற்கென தனி அமைப்புகளும் உள்ளது.
அவுட்டோர் யூனிட் சங்கத்தினர் வரும் ஜுன் 1ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர். புதிய உறுப்பினர் சேர்க்கைக்காக பெப்ஸி அமைப்பு ஒருவரிடமிருந்து உறுப்பினர் சேர்க்கைக் கட்டணமாக மூன்று லட்ச ரூபாய் வரை வசூலிக்கச் சொல்லி உள்ளதாம். கட்டணத்தை இப்படி அதிரடியாக உயர்த்தியதற்கு அவுட்டோர் யூனிட் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால், சினிமா, டிவி, ஓடிடி படப்பிடிப்புகள் ஜுன் 1 முதல் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக சினிமா, டிவி படப்பிடிப்புகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் வேலை நிறுத்தம் நடந்தால் அது பெரிய பாதிப்பு ஏற்படுத்தும். அதேசமயம் உறுப்பினர் கட்டணத்தை மூன்று லட்சமாக உயர்த்தியதும் தவறான செயல் என தொழிலாளர்கள் கருதுகிறார்கள்.
இது தொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.