படப்பிடிப்பில் ராஷி கண்ணா காயம் | மீண்டும் லாயர் ஆகிறார் விஜய் ஆண்டனி | டெரர் போலீஸ் அதிகாரியாக சாய் தன்ஷிகா | பிளாஷ்பேக்: மோகனுக்கு குரல் கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 75 ஆண்டுகளுக்கு முன்பே 'அவருக்கு பதில் இவர்' | ஐதராபாத்தில் ஆரம்பமாகும், நடக்கும் தமிழ் சினிமா…. இதுதான் தமிழ்ப்பற்றா ? | மம்முட்டி - கவுதம் மேனன் பட ஓடிடி ரிலீஸ் தாமதம் ஏன் ? | மதுபாலாவின் 'சின்ன சின்ன ஆசை': வெளியிட்ட மணிரத்னம் | மோகன்லால் பிறந்தநாள் பரிசாக பலாப்பழ ஓவியம் வரைந்த ஓவியர் | சொல்லாமல் விலகிய பாலிவுட் நடிகர் மீது 25 கோடி நஷ்ட ஈடு கேட்டு அக்ஷய் குமார் வழக்கு |
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், பெப்சிக்கும் இடையே சம்பளம் விஷயத்தில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை :
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் மே 2 அன்று நடந்தது. இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகிய இரு தரப்பினருக்கும் மட்டுமே காலங்காலமாக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆனது இருந்து வருகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புதிய ஒப்பந்தம் மார்ச் 9ம் அன்று இரு தரப்பினர் இடையே நடந்தது. ஆனால் ஒப்பந்தத்தை அவமதிக்கும் வகையில் பெப்சி அமைப்பினர் செயல்பட்டதால் இரு தரப்புக்கும் இடையே ஒப்பந்தமான ரத்து செய்யப்படுகிறது. இனி தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தங்களுக்கு தேவையான வேலையாட்களை யாரை வைத்து வேண்டுமானாலும் படப்பிடிப்பு பணிகளை மேற்கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி இடையேயான மோதல் அதிகமாகி உள்ளது.