ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் பட ரிலீஸ் எப்போது? | எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களுக்குத்தான் அதிகாலை 4 மணிக்கெல்லாம் பல தியேட்டர்களில் காட்சிகளை ஆரம்பிப்பார்கள். அதன் பிறகு 8 மணிக்கு மற்றொரு காட்சி, பின் வழக்கமான நான்கு காட்சிகள் நடைபெறும்.
இந்த வாரம் வெளியாகும் ஹாலிவுட் படமான 'டாக்டர் ஸ்ட்ரேன்ஜ்' படத்திற்கும் அதிகாலை 4 மணி காட்சியை தியேட்டர்காரர்கள் திட்டமிட்டுள்ளார்கள். மார்வெல் ஸ்டுடியோஸ் படங்கள் இளைஞர்களிடமும், குழந்தைகளிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றவை. அதிலும் குறிப்பாக 'அவெஞ்சர்ஸ்' கதாபாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவை.
'டாக்டர் ஸ்ட்ரேன்ஜ்' படத்திற்காக படம் வெளியாகும் மே 6ம் தேதியன்று அதிகாலை 4 மணி காட்சிகள் நடைபெற உள்ளது. அதற்கடுத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 8 மணி காட்சிகள் முடிந்தால் அதிகாலை 4 மணி காட்சிகளையும் நடத்தத் திட்டமிட்டுள்ளார்களாம். இந்த வாரம் வேறு எந்தப் பெரிய படமும் இல்லாத காரணத்தால் அந்த சிறப்புக் காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.