இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார் . 2018ம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ் நடித்து முடித்த திரைப்படம் 'ஐங்கரன்'. இந்த படத்தை 'ஈட்டி' படத்தை இயக்கிய ரவி அரசு இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமரே இசையமைத்துள்ளார் .
ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் 2019 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கொரோனா ஊடரங்கு காரணமாக வெளியாகாமல் இருந்த இப்படம் வருகின்ற ஏப்ரல் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இப்படம் சொன்ன தேதியில் வெளியாகாது என்றும், அதற்கு பதிலாக மே 5-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.