''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
தமிழில் அடுத்தடுத்து அஜித்தை வைத்து படங்களைத் தயாரித்து வருபவர் போனி கபூர். இவரது மூத்த மகள் ஜான்வி கபூர் தெலுங்கு, தமிழில் அறிமுகமாவது பற்றி அடிக்கடி செய்திகள் வரும். இதுவரை பல முறை இப்படியான செய்திகள் வந்துவிட்டன. அனைத்திற்கும் அவ்வப்போது மறுப்புகளைத் தெரிவிப்பார் ஜான்வி.
அந்த விதத்தில் தற்போது மீண்டும் ஒரு மறுப்பு தெரிவித்துள்ளார். விஜய் தேவரகொண்டா அடுத்து நடிக்க உள்ள 'ஜனகனமண' படத்தில் ஜான்வி கதாநாயகியாக நடிக்கப் போவதாக செய்திகள் வந்தன. அவற்றிற்கு மறுப்பு தெரிவித்து ஒரு பேட்டியில், “நான் எந்த ஒரு தமிழ், தெலுங்குப் படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. அப்படி ஏதாவது ஒன்று நடந்தால் அதை நானோ அல்லது படத்தயாரிப்பு நிறுவனமோ அது பற்றி அறிவிப்பார்கள்,” என்று தெரிவித்துள்ளார்.
ஜான்வியின் அம்மாவான மறைந்த நடிகை ஸ்ரீதேவி, தமிழ், தெலுங்கில் முன்னணிக்கு வந்து பின்னர்தான் ஹிந்தியில் அறிமுகமாகி அங்கும் நம்பர் 1 இடத்தில் இருந்தார். ஆனால், ஜான்வி ஹிந்தியில் இன்னும் முன்னணி அந்தஸ்து நடிகையாகக் கூட உயராமல் இருக்கிறார்.