ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தமிழ்த் திரையுலகத்தின் முக்கியமான காதல் ஜோடியாக கடந்த சில வருடங்களாக இருப்பவர்கள் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன். இருவருமே தற்போது மிகவும் பிஸியாக இருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்பவர்கள் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக எங்கும் செல்லவில்லை.
விக்னேஷ் சிவன் தற்போது 'காத்து வாக்குல ரெண்டு காதல்' பட வேலைகளில் மிகவும் பிஸியாக இருக்கிறார். அந்த வேலைக்கு நடுவிலும் நயன்தாராவைக் காதலிக்கும் வேலையை மறக்காமல் செய்து வருகிறார். கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு இருவரது செல்பி புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
அதோடு, “கடைசி கட்ட வேலைகளுக்கு நடுவில் கொஞ்சம் மூச்சு விடும் நேரம். படம் சென்சாருக்குத் தயாராகி வருகிறது. நல்லதே நடக்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன். இன்று முதல் அனைத்து அப்டேட்டுகளும் வரும் என்றும்,” குறிப்பிட்டுள்ளார்.
விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்க அனிருத் இசையில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படம் ஏப்ரல் 28ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.