தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் | நள்ளிரவு பூஜை நடத்திய பூ நடிகை | துக்கடா வேடங்களை ஒதுக்கும் புயல் காமெடியன் |
எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பின் சூர்யா நடிப்பில் பாலா இயக்கும் படம் மற்றும் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படங்கள் தயாராகி வருகின்றன. இவற்றில் பாலா படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. மீனவ பிரச்னை தொடர்பான இந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நடக்கிறது.
இந்நிலையில் இந்த படப்பிடிப்பின் போது ஓய்வு நேரத்தில் இருக்கும் சூர்யா தனது அடுத்த படமான ‛வாடிவாசல்' படத்திற்கும் தயாராகி வருகிறார். அதாவது ‛வாடிவாசல்' படம் ஜல்லிக்கட்டு, ஜல்லிக்கட்டு காளை தொடர்பான கதை என்பதால் காளைகளுடன் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பாலா படத்தில் இருக்கும் சூர்யா, ஓய்வு நேரத்தில் மாடு ஒன்றை பிடித்தபடி ‛என் தமிழ் - இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்' என தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடம் வைரலானது.