விஜய்க்கு பவன் கல்யாண் ஆலோசனை சொன்னாரா? | ஏஆர் முருகதாஸை வறுத்தெடுத்த சல்மான் கான் | காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி |
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் நானே வருவேன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
தாணு தயாரிக்கும் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நடிகை இந்துஜா உடன் முக்கிய கதாபாத்திரங்களில் செல்வராகவன், யோகிபாபு, இந்துஜா, ஸ்வீடிஷ் நாட்டை சேர்ந்த நடிகை எல்லி அவ்ராம், பிரபு ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் நடிகை எல்லி அவ்ராம் தனக்கான படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் தனுஷ், செல்வராகவனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.