திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் மார்ச் 25ம் தேதி வெளிவந்த படம் 'ஆர்ஆர்ஆர்'. முதல் நாளில் 100 கோடி, மூன்றே நாட்களில் 500 கோடி என வசூலித்து சாதனை புரிந்த படம், பதினைந்தே நாட்களில் 1000 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளது.
இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத் தயாரிப்பு நிறுவனமான டிவிவி என்டர்டெயின்மெட் அறிவித்துள்ளது. “இந்தியாவில் 1000 கோடி என்பது ஒரு படத்திற்கான கனவு ஓட்டம். உங்களுக்காக எங்களுடைய சிறந்ததைச் செய்தோம், அதற்குப் பதிலாக எங்கள் மீது உங்களது விலைமதிப்பில்லா அன்பைச் செலுத்தியுள்ளீர்கள். பீம் என்டிஆர் ரசிகர்களுக்கும், ராமராஜு ராம்சரண் ரசிகர்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கும் நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
உலக அளவில் 1000 கோடி ரூபாய் வசூலைக் கடந்த மூன்றாவது இந்தியப் படம் இது. ஆமீர்கான் நடித்த 'டங்கல்', ராஜமவுலி இயக்கிய 'பாகுபலி 2' ஏற்கெனவே உலக அளவில் 1000 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது.