அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
தமிழில் நம்பர் 1 நடிகையாக இருக்கும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் காதலர்கள் என்பது உலகறிந்த விஷயம். இருவருக்கும் ஏற்கெனவே திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது. எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்பதுதான் இன்னும் தெரியாமல் உள்ளது.
தனது வருங்கால மாமனார் குடும்பத்துடன் ஏற்கெனவே நெருங்கிப் பழகி வருபவர் விக்னேஷ் சிவன். தனி விமானத்தில் நயன்தாராவுடன் கேரளா சென்று பரபரப்பை ஏற்படுத்தியவர். நயன்தாராவின் அப்பா உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்து தற்போது தேறியிருக்கிறார். அவருக்கு நேற்று பிறந்தநாள். தனது மாமனாருக்காக விக்னேஷ் சிவன் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
“இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அச்சன் குரியன். உங்கள் சிரிப்பைப் பார்ப்பது, நீங்கள் சாப்பிடுவதைப் பார்ப்பது, நீங்கள் எங்களைப் பார்ப்பது மகிழ்ச்சி. உங்கள் இருப்பு எங்களது வாழ்க்கையை அழகாக்கும். எங்களுடன் எப்போதும் என்றென்றும் உடனிருக்க கடவுகள் உங்களுக்கு வலிமையையும், சக்தியையும் கொடுக்கட்டும், லவ் யு அச்சு, நீங்கள்தான் எங்கள் ஆசீர்வாதம்,” என்று குறிப்பிட்டு அவருடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.