படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் |
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. ஏப்ரல் 9ம் தேதி பிக்பாஸ் அல்டிமேட்டின் இறுதி போட்டி நடைபெற்று, அதன் ஒளிபரப்பு ஏப்ரல் 10ம் தேதி நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்த வாரத்திற்கான எவிக்சன் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதற்கிடையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் தாமரையை ஹவுஸ்மேட்கள் டார்கெட் செய்து வருகின்றனர். 'நானாக நானிருந்தேன்' என்ற டாஸ்க்கின் போது ரம்யா பாண்டியனும், அபிராமியும் 'தாமரைக்கு தனித்துவமும் இல்லை, நேர்மையும் இல்லை அவர் நடிக்கிறார்' என அவரது குறையை சுட்டிக்காட்டி பேசுகின்றனர். இதனால் மூன்று பேருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெறுகிறது. அதில் முதல் சுற்றில் தாமரை வெளியேற்றப்படுவதால் அவர் கண்கலங்குகிறார். மேலும், வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், நிரூப், அபிராமி, ரம்யா ஆகிய மூவரும் விளையாடுகின்றனர். அதில் நிரூப், அபிராமி பாலாவின் பின்னாடியே செல்வதாக சொல்கிறார். இதனால் மனமுடைந்த அபிராமி கதறி அழுகிறார்.
இது ஒருபுறமிருக்க இதுவரை பதிவான வாக்குகள் அடிப்படையில் அபிராமி அல்லது ரம்யா இந்த வாரம் எவிக்சன் ஆகலாம் என கூறப்படுகிறது. அதேசமயம் ஹவுஸ்மேட்கள் தாமரையை டார்கெட் செய்து வெளியேற்றுவதில் குறியாக உள்ளனர் என்றும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.